×

டீஸ்டா செடல்வாட் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிரான வழக்கில் இருந்து குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே விலகினார். 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை தயார் செய்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் டீஸ்டா செடல்வாட்டுக்கு ஜாமீன் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் செடல்வாட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்துவதில் இருந்து விலகுவதாக குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே கூறினார்.

The post டீஸ்டா செடல்வாட் வழக்கில் இருந்து நீதிபதி விலகல் appeared first on Dinakaran.

Tags : Teesta Setalvad ,Ahmedabad ,Gujarat High Court ,Teesta Setalwat ,Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...